"அனைத்துப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்"... வெங்கைய நாயுடுக்குப் பிரியாவிடையளித்த பிரதமர்

0 2642

கட்சித் தொண்டர் முதல் குடியரசுத் துணைத் தலைவர் வரை அனைத்துப் பொறுப்புகளிலும் வெங்கைய நாயுடு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகவும், எந்த வேலையையும் சுமையாகக் கருதியதில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு 10 அன்று நிறைவடைவதையொட்டி அவருக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அரசியலில் இருந்து ஓய்வு, பொதுவாழ்வில் ஓய்வில்லை என்கிற வெங்கையாவின் பேச்சை மேற்கோள் காட்டியதுடன், அவரது அனுபவங்கள் பொதுவாழ்வில் உள்ளோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்த விடுதலை நாள் கொண்டாட்டத்தின்போது உள்ள குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், சபாநாயகர், பிரதமர் அனைவரும் விடுதலை பெற்ற இந்தியாவில் பிறந்தோர் எனவும், அனைவரும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments